உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள்

நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடல் செயல்பாட்டிற்கு அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். நம் உடலில் இயற்கையாகவே இரத்த சுத்திகரிப்பு நடைபெறுகிறது. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் உண்ணும் உணவின் மூலமாகவே நம் இரத்தம் அசுத்தமாக மாறிவிடுகிறது. துரித உணவுகள், குளிர்பானங்கள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றை நாம் சாப்பிட்டாலும் நம் இரத்தம் சுத்தம் இல்லாமல் அசுத்தமாகிவிடுகிறது.

இரத்தத்தை இயற்கையான முறையில் நாம் எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதை பார்க்கலாம். 

இரத்த சுத்திகரிப்பு இரத்தத்தை சுத்திகரிக்கும் இயற்கை உணவுப் பொருட்கள்

  1. பீட்ரூட் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின்களான ஈ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளன.
  2. செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
  3. முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
  4. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
  5. தக்காளி தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகும்.
  6. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
  7. இன்றைய நிலையில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
  8. அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
  9. இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுப்போட்டால் போதும்.
  10. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
  11. இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள் கேரட்டும் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம்.
  12. புளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்  உள்ளது. ஆகவே இதனை சாப்பிட இரத்தம் சுத்தமாவதோடு, இரத்த அழுத்தம் குறையும், சரும ஆரோக்கியம் மேம்படும், சரும புற்றுநோய் வரும் அபாயமும் குறையும்.
  13. காலிஃப்ளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும் பிராக்கோலியில், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதோடு இதில் சல்போராபேன் என்னும் பைட்டோகெமிக்கலும் உள்ளது. இது கல்லீரல் நொதிகளைத் தூண்டி, இரத்தத்தை சுத்தம் செய்து, கார்சினோஜென்களை வெளியேற்றும்.
  14. இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் நலத்துடன் இருக்க தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெதுவெதுப்பான நீரை ஒரு தாமிர பாத்திரத்தில் வைத்து விட்டு. காலையில் எழுந்தவுடன் அந்த நீரை பருகுவதால் இரத்தம் சுத்தம் செய்ய படுகிறது. தாமிரம், கல்லீரலை குளிர்ச்சியடைய வைக்கிறது. தண்ணீர் கழிவுகளை வெளியேற்றுகிறது.
  15. பச்சை காய்கறிகளில் மிகவும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சிவப்பு இரத்த அணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க இந்த காய்கறிகளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் உதவுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நீலக்கல்

எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் அணிந்தால் அதிஷ்டம் உண்டாகும்

இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் - ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான  ராசிக்கல்  நாம் அணிய வேண்டும். நம் கைவிரல்களில்  அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து  நமக்கு...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
சாப்பிடும் முறை

சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?

சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி சாப்பிட வேண்டும்? அன்றாட பழக்கவழக்கங்களில் நம் முன்னோர்கள் பல சாஸ்திரங்கள் கூறியிருப்பதை இன்றும் நாம் கடைபிடித்து வருகிறோம். நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு. அதுமட்டுமின்றி...
சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...
போட்டிக் குழம்பு

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும்...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.