புனர்பூ தோஷம் என்றால் என்ன? புனர்பூ தோஷம் பரிகாரம்

புனர்பூ தோஷம்

திருமணத்திற்கு மணப்பெண் மற்றும் மணமகன் ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக செவ்வாய்தோஷம் மற்றும் நாகதோஷம் பார்க்கபடுகிறது. இவ்வகையான தோஷங்களையெல்லாம் பார்க்கும் போது புனர்பூ தோஷம் இருக்கிறதா என யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால் ஜாதக பொருத்தம் பார்க்கும்போது புனர்பூ தோஷமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

புனர்பூ தோஷம் என்றால் என்ன? புனர்பூ தோஷம் பரிகாரம்

புனர்பூ தோஷத்தை எவ்வாறு அறிவது?

ஜாதகத்தில் சனியும், சந்திரனும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அல்லது சனியின் பார்வையில் சந்திரன் இருப்பது அல்லது இருவரும் ஒரு அதிபதி நட்சத்திரத்தில் பயணித்தால் அந்த ஜாதகம் புனர்பூ தோஷ ஜாதகம் ஆகும்.

புனர்பூ தோஷம் என்ன செய்யும்?

ஒருவரது ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி பின்பு தீடிரென திருமணம் நின்று விடும் அல்லது இரு வீட்டாரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய பேச்சுவார்த்தை நடை பெற்று திடீர் என்று ஏதாவது ஒரு பிரச்சனை மற்றும் காரணத்தால் திருமணம் தடைபெறுவது, திருமணத் தேதி குறித்து பின்பு இருவீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டு திருமணம் நிற்பது மேலும், திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவது போன்றவை நிகழும்.

திருமணம் நடைபெற்றாலும் திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்குள் யாருக்காவது உடல் நீலை பாதிக்கபடுவது, தீராத வியாதியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவது, இரு தார யோகம் ஏற்படுவது, திருமணம் செய்து சில நாட்களிலேயே பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விடுவது, கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் சீக்கிரமாகவே இறந்துவிடுவது போன்ற துர்நிகழ்ச்சிகள் ஏற்படும்.

புனர்பூ தோஷத்துக்கான பரிகாரங்கள்

புனர்பூ ஜாதக அமைப்பு கொண்டவர்கள் திருமணஞ்சேரி தலத்திற்கு சென்று முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். முடி காணிக்கை செலுத்துவது நல்லது.

களத்திர தோஷம் பரிகாரம்

தொடர்ச்சியாக வரும் மூன்று பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.

புனர்பூ தோஷத்துக்கான மந்திரம்

சனி காயத்ரி மந்திரம்

காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்

சனி ஸ்துதி

நீலாஞ்சன சமா பாசம்

ரவிபுத்ரம் யமாக்ஞ்ரஜம்

சாய மார்த்தாண்ட தம் பூதம்

தம் நமாமி சனைஸ்வரம்

இந்த மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லி வந்தால் புனர்பூ தோஷ பாதிப்பு குறைந்து திருமணத் தடையை நீங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
நவகிரக தோஷ பரிகாரகங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை

செவ்வாய் தோஷம் திருமணத்திற்கு வரன் பார்த்து பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கப்படும் ஒரு விஷயம் பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். இந்த செவ்வாய் தோஷம் கிட்டத்தட்ட பலருடைய வாழ்க்கையை...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
கறிவேப்பிலை டீ நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் நம் வீடுகளில் அன்றாட சமையலில்  பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகை கறிவேப்பிலையாகும்.  கறிவேப்பிலை சமையலுக்கு மட்டுமல்லாது மருந்தாகவும் பயன்படுகிறது. தினசரி உணவில் இதைப் பயன்படுத்துவது இயல்பானதுதான்,...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
பெண் தலை மச்ச பலன்கள்

பெண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் தலை மற்றும் புருவ மச்ச பலன்கள் பெண்ணின் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பேராசை, மற்றும் பொறாமை குணம் இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. பெண்ணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.