சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம் 

நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். அவற்றில் ஆயில் ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் சிரமமானது.

எண்ணெய் பசை சருமம்நம் சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் பசை இருக்கும். எண்ணெய் பசைபோதிய அளவில் சுரப்பதே சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. அதுவே கூடுதலாக சுரந்தால் எண்ணெய் வழியும் முகம் குறைவாக சுரந்தால் வறண்ட முகம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எனவே எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் எண்ணெய் பசையினால் சருமத்தில் பருக்கள், கட்டிகள், ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க 

  1. ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனப் பொடி சிறிதளவு பால் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவிய பின்  20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை தன்மை குறைந்து முகம் பளிச்சிடும்.
  2. அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும்.சருமத்தில் எண்ணெய் பசை குறைய
  3. முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க நன்கு  கடைந்த மோரை எடுத்து அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் மோரில் உள்ள நல்ல பாக்டிரீயாக்கள் சருமத்தில் உண்டாகும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகத்தை பொலிவடைய செய்யும்.
  4. பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் பேக் போல போட்டு மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் பளபளவென்று இருக்கும்.
  5. ஒரு ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு  10 நிமிடங்கள் நன்கு உலர விடவும். பின்னர் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து விட்டு சிறது நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசையினால் ஏற்படும் பருக்களை மறைய செய்து முகத்திற்கு பொலிவை தரும்.முகத்தில் எண்ணெய் பசை வர காரணம்
  6. ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தை அடிக்கடி துடைத்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.
  7. 1 முதல் 2 ஸ்பூன் ஓட்ஸை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்டுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 2 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் ஜொலிக்கும்.
  8. சருமத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த ஐஸ் கட்டி உதவும்.  ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், எண்ணெய் வழியாமலும் இருக்கும். ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் பயன்படுத்தக் கூடாது.
  9. தக்காளியை இரண்டு துண்டுகளாக வெட்டி அதன் மேல் சர்க்கரையை தடவி முகத்தில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பின் ஒரு 2 நிமிடங்கள் உலர விட்டு பின் கழுவவும். இவ்வாறு செய்வதால் சரும பிரச்சனைகள் நீங்கி முகம் பொலிவாகும்.
  10. கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து பின் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழிவது படிப்படியாக குறையும்.
  11. வெள்ளரிக்காயை அரைத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு  சருமத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்பட்டு  முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
  12. க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் கொஞ்சம் எடுத்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம்...
சிக்கன் பக்கோடா செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன்...
பூக்கள் கனவு பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
பால் பணியாரம் செய்வது எப்படி

செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம் தேவையான பொருட்கள்  பச்சரிசி - 1 கப் உளுந்து - 1 கப் தேங்காய் துருவல் – 2 கப் ஏலக்காய் - தேவையான அளவு சர்க்கரை – 1...
அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால் வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும்...
கறிவேப்பிலை டீ நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் நம் வீடுகளில் அன்றாட சமையலில்  பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகை கறிவேப்பிலையாகும்.  கறிவேப்பிலை சமையலுக்கு மட்டுமல்லாது மருந்தாகவும் பயன்படுகிறது. தினசரி உணவில் இதைப் பயன்படுத்துவது இயல்பானதுதான்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.