உடல் நோய்களை தீர்க்கும் திரிபலா

உடல் நோய்ளை தீர்க்கும் திரிபலா   

நம் அன்றாட வேலைகளை திறம்பட செய்ய உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகும். அதற்கு சத்தான உணவு, உடற்பயிற்சி முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கம் இவை மூன்றும் மிக முக்கியமானதாகும்.

போதிய உடல் உழைப்பு இல்லாததால் உடல் பல வகையான நோய் தாக்கத்திற்கு ஆளாகிறது. இதனால் உடல் சோர்வு, சர்க்கரை நோய், உள்ளுறுப்புகள் பாதிப்பு, இளநரை , இளமையிலேயே முதுமையான தோற்றம் உண்டாகிறது. இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா சூரணம் திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவ கண்டுபிடிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா.

நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

திரிபலா நன்மைகள்

நோய் எதிர்ப்புச் சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

திரிபலா எப்படி சாப்பிட வேண்டும்சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்

சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்

புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் கனவு என்பது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும். எந்த மாதிரியான கனவுக்கு என்ன பலன்கள் ஏற்படும் என்று பெரியோர்கள் முற்காலங்களில் சொல்லி வைத்துள்ளனர். அந்த வகையில் பஞ்சபூதங்கள்...
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...
நட்சத்திரங்களும் கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும் அஸ்வினி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் மற்றும் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். பரணி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்...
காபி குடிப்பது நல்லதா

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ?

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சமயம் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர்....
கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கடுக்காய் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதத்தில் பல்லாண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.