சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம்

வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும்.

மாவிலை தோரணம் கட்டும் முறை வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும், பண்டிகைகளிலும், பூஜைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் இப்படி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மாவிலைத் தோரணம் இல்லாமல் இருப்பதில்லை. பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றக்கூடிய நாம், மாவிலை வீட்டு வாசலில் தோரணமாகவும், பூஜைகளின் போதும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

மாவிலை அழகிற்காக மட்டும் நாம் வாசலில் கட்டுவதில்லை. அறிவியல் ரீதியாகவும் மாவிலையை வாசலில் , சுப நிகழ்ச்சிகளில் போன்ற பல இடங்களில் கட்டுவது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். மாவிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நம் வீட்டிற்கு வருவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை சரிசெய்ய மாவிலை பயன்படுகிறது. மாவிலைக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் என்பதை பார்ப்போம்.

மாவிலையை ஏன் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று மாவிலை தோரணம் முக்கியமான ஒன்றாகும்.

மாவிலையில் மகாலட்சுமி வசிப்பதால், துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்பது ஐதீகம்.

மாவிலையை வாசலில் 11 அல்லது 21 இலைகள் என்ற எண்ணிக்கையில் கட்டுவது சிறந்தது.

மாவிலை தோரணம் கட்டுவது ஏன்மாவிலைத் தோரணம் கட்டப்பட்ட வீடுகளில் தேவர்கள் நுழைவதால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பிறக்கும்.

மாவிலைகளில் மஞ்சள், குங்குமம் இடுவதால் ஏற்படும் ஒருவித காந்த சக்தியானது கெட்ட சக்திகளை தடுத்து தெய்வீக சக்திகளை வீட்டில் பரவச் செய்யும் தன்மை கொண்டது. அதனால்தான் சுப நிகழ்ச்சிகளில் மாவிலை பயன்படுத்தப்படுகிறது.

விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை.

மாவிலையானது கரியமில வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

அதனால்தான் மாவிலைகளை வீட்டில் தோரணங்களாகவும். பூஜைகளிலும், மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் தோரணமாக கட்டி பயன்படுத்துகின்றனர்.

மேலும் மாவிலைகள் காற்றை சுத்தம் செய்து நமக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கிறது.

மாவிலை காய்ந்த பிறகும் வெகு நேரம் ஆக்சிஜனை வெளியிட்டுக் கொண்டிருக்கும்.

மாவிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு நம்மை நோயிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

வாஸ்து கடவுளான மயனுக்கு உகந்த மரம் மாமரமாகும். வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால் அதனை முற்றிலும் அழிக்கும் சக்தி மாவிலைக்கு உண்டு என்பதன் காரணமாகவே மாவிலையானது அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...
ஏகாதசி திதி

ஏகாதசி திதி பலன்கள், ஏகாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

ஏகாதசி திதி ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின்...
துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...
சிக்கன் பிரைடு ரைஸ் செய்முறை

சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டில் செய்வது எப்படி

சிக்கன் பிரைடு ரைஸ் சைனீஸ் உணவு வகைகள் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை மற்றும் ருசி மிகுந்தவை. இதற்கு உதாரணம் நம் ஊரில் தெருக்கு தெரு இருக்கும் துரித உணவு கடைகள் தான். அந்த வகையில்...
விருச்சிக ராசி பலன்கள்

விருச்சிக ராசி பொது பலன்கள் – விருச்சிக ராசி குணங்கள்

விருச்சிக ராசி குணங்கள் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. இவர்களுக்கு எத்தனை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.