மூட்டு வலியை குணப்படுத்தும் முடக்கத்தான் கீரை துவையல்

முடக்கத்தான் கீரை துவையல்

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.  முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய், பக்கவாதம்  போன்ற நோய்கள் குணமாகின்றன. வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

முடக்கத்தான் பயன்கள் தேவையான பொருட்கள்

  1. முடக்கத்தான்  – ஒரு கட்டு
  2. புளி – சிறிதளவு
  3. உப்பு – தேவையான அளவு
  4. பூண்டு – 10 பல்
  5. காய்ந்த மிளகாய் – 6
  6. இஞ்சி – சிறிய துண்டு
  7. சீரகம் – ½ ஸ்பூன்
  8. மிளகு – ½ ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  10. கடுகு – 1 ஸ்பூன்
  11. உளுந்து – 1 ஸ்பூன்
  12. பெருங்காயத் தூள் – சிறிதளவு

செய்முறை

  1. முடக்கத்தான் கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சீரகம்,மிளகு,பூண்டு, காய்ந்த‌ மிளகாய், இஞ்சி, சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதனுடன் சுத்தம் செய்த‌ முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் சிறிதளவு புளி, தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதங்கிய பின் இறக்கி ஆற விடவும்.
  6. சூடு ஆறியவுடன் மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  7. பின்னர் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  8. எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
  9. தாளித்த பின் அதில் அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் விழுது சேர்த்து சிறிதளவு பெருங்காய‌ தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  10. எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறி இறக்கினால் சுவையான முடக்கத்தான் துவையல் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...
பொடுகு பிரச்சனையை தீர்க்க

பொடுகை விரட்ட இந்த ஹேர் மாஸ்கை ட்ரை பண்ணுங்க

பொடுகை விரட்ட எளிய டிப்ஸ்  தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட...

வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

வசியப் பொருத்தம் என்றால் என்ன? வசியப் பொருத்தம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன், ஒருவருக்கொருவர் இன்பமுடன் வாழ்வார்களா என்பதை அறிய பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும்....
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 எப்படி செய்வது ?

சிக்கன் 65 செய்வது எப்படி? சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர்...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...
ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? ஸ்திரீ என்றால் பெண் என்று அர்த்தம், தீர்க்கம் என்றால் முழுமையான அல்லது இறுதியான என்று அர்த்தம். ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்பது பொருள் வளத்தையும், செல்வத்தையும், செல்வாக்கையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.