உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் பலவண்ண காய்கறிகள், பழங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்களை வெவ்வேறு நிறங்களில் சாப்பிடுவது பல்வேறு ஊட்டச்சத்துக்களைப் பெற உதவும். பல வண்ணங்களில் இருக்கக் கூடிய காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். இவற்றில் இருக்கக் கூடிய நிறங்கள் இயற்கையானது மற்றும் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒவ்வொரு நிறத்திலான காய்கறிகளும், பழங்களும் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்களையும், பலன்களையும் கொண்டிருக்கின்றன. தினமும் பல வண்ணக் கலவையான காய்கள், பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டச்சத்தை நாம் பெற முடியும். அந்த பல வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்களை அறிந்து கொள்வோம்.
சிவப்பு நிறம்:
சிவப்பு நிறம் ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட்.
சிவப்பு நிறக் காய்கள், பழங்களில் லைக்கோபின் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது.
சிலவகையான புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
நீலம் மற்றும் ஊதா :
திராட்சை, நாவல் பழம், பிளம் பழம், கத்தரிக்காய்.
வைட்டமின் சி, நார்ச்சத்து, பிளேவனாய்ட் போன்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளது.
கெட்ட கொழுப்பைக் குறைத்தல்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல்.
செரிமானத்திற்கு உதவுதல்.
கால்சியம் உள்ளிட்ட சில தாது உப்புக்களை உடல் கிரகிக்க உதவுதல்.
வீக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான செல்கள் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுதல்.
பச்சை நிறம்:
பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ்,அவரைக்காய்
இந்த காய்கள், பழங்கள் பச்சை நிறத்தை குளோரோபில்-இல் இருந்து பெறுகின்றன. இந்த குளோரோபில் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து, நம் உடலில் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குளோரோபில்லில், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் உள்ளன.
ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிபங்கல் ரசாயனம் இதில் உள்ளதால் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது
இரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
நோய் குணமாகும் வேகத்தை இது 25 சதவிகிதம் வரை விரைவாக்குகிறது.
எலும்பு, தசைகள் மற்றும் மூளை வலுப்பெறுகிறது.
மஞ்சள், ஆரஞ்சு நிறம்:
மாம்பழம், அன்னாசிப்பழம், கமலா ஆரஞ்சுப்பழம், கிருணிப்பழம், பூசணி, எலுமிச்சை , மக்காச்சோளம்.
பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
வயதாகும்போது ஏற்படும் திசுக் குறைபாடுகளைத் தவிர்த்து புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தைப் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.




















