உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்
சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல், இடை இடையே தண்ணீர் அருந்தாமல், அப்படியே விழுங்காமல் மெல்ல மென்று பொறுமையாக சாப்பிட்டால் வாழ்க்கையின் ஆயுளை நீட்டிக்கலாம் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். அந்த வகையில் நாம் உணவு சாப்பிடும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
சமையல் என்பது ஒரு கலை என்பார்கள். சமைப்பது மட்டும் அல்ல சமைத்ததை பரிமாறுவதும் ஒரு கலை தான். அன்பாகவும், அக்கறையாகவும் பரிமாறும் போது சாப்பிடுபவர்களின் வயிறு மட்டும் அல்ல மனதும் சேர்ந்து நிறைகிறது.
சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அந்த உணவைப் பரிமாறுபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் முதலில் சாதத்தை சிறிதளவும் சிந்தாமல் பரிமாற வேண்டும். சாதம் கீழே சிந்தினால் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடும் என்கிறது சாஸ்திரங்கள்.
உண்ணும் உணவு தெய்வத்திற்கு நிகரானது. அதனால் தான் சாதத்தை நாம் அன்னபூரணி என்கிறோம். எனவே தெரியாமல் கூட அன்னத்தைக் கீழே சிந்தக்கூடாது. அன்னத்தை கீழே சிந்தினால் தோஷம் ஏற்படும், இதனால் வறுமை தாண்டவம் ஆட ஆரம்பிக்கும். மற்றவர்களிடன் கையேந்தும் நிலை ஏற்படும் என்பதால் தான் உணவு விஷயத்தில் நிறையவே கவனம் செலுத்த வேண்டும். அன்னத்தை மட்டுமல்லாமல் சாப்பாடு பரிமாறும் பொழுது உப்பு, தயிர், ஊறுகாய் போன்றவற்றையும் கீழே தெரியாமல் கூட சிந்த விடக் கூடாது.
உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. தயிர் கோமாதா கொடுக்கும் ஒரு அற்புதமான அமிர்தமாகும். குபேரனுக்கு உகந்த ஊறுகாயை கீழே கொட்டினால் பணக் கஷ்டம் வரும். இப்படியான பொருட்களை கீழே சிந்தாமல் பக்குவமாக பரிமாறப்பட வேண்டும். பரிமாறுபவர் மட்டுமல்ல, அதை சாப்பிடுபவர்களும் தட்டில் வைத்து ஒழுங்காக சாப்பிட வேண்டும். தட்டை சுற்றி இவற்றை சிந்துவது என்பது கூடாது. சிலருடைய தட்டை சுற்றி பார்த்தால் சாத பருக்கைகளும், மற்ற சில உணவுப் பொருட்களும் சிந்திக் கிடக்கும். இது போல சிந்திக் கொண்டே சாப்பிடுபவர்களுக்கு கையில் நிச்சயம் பணம் என்பது தங்கவே செய்யாது.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது வந்த வழியே ஓடிக் கொண்டே இருக்கும். எனவே சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் பணமானது சிந்தாமல், சிதறாமல் வந்து கொண்டே இருக்கும் என்கிறது ஆன்மீகம்.
அரிசி, உப்பு, ஊறுகாய், தயிர் மட்டுமல்லாமல் பொதுவாகவே எந்த ஒரு உணவுப் பொருட்களையும் கீழே சிந்தக் கூடாது. குறிப்பாக தண்ணீரை அருந்தும் பொழுது கீழே சிந்திக் கொண்டே குடிக்கக் கூடாது. தண்ணீர் கீழே சிந்தினால் கடன் பிரச்சனை ஏற்படும். சாப்பிடும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் இதற்காகத் தான். நிதானமாக சாப்பிட்டு, முழு ஈடுப்பாட்டுடன் சாப்பிட்டு பாருங்கள், அதன் பிறகு உங்களுக்கு தோல்வியே வராது.