அற்புத குணம் கொண்ட அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி என்றால் இது வகையான அரிசி வகை என நினைக்க வேண்டாம். இது சித்த மருத்துவத்தில் பயன்படும் ஒரு வகை மூலிகையாகும். இதன் விதைகள் அரிசி குருணை போன்று சிறிதாக இருப்பதால் பச்சரிசி எனவும், தாய்பாலை அதிகரிக்க பயன்டுவதால் இது அம்மான் பச்சரிசி என அழைக்கபடுகிறது. இது ரோட்டு ஓரங்களிலும், புதர்களிலும் தானே வளரும் தன்மையுடையது.

அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள்
அம்மான் பச்சரிசி மூலிகையானது ஈரபதம் உள்ள இடங்களில் தானாக வளரும் தன்மையுடையது. இது சிறு செடிவகையாகும். இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் கூரான நுனிப்பற்களுடன் ஈட்டி வடிவ அமைப்பு கொண்டது. இதன் இனபெருக்கம் ஆனது விதைகள் மூலம் நடைபெறுகிறது. அம்மான் பச்சரிசியின் இலை, தண்டு, பால், பூ போன்ற அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

அம்மான் பச்சரிசியின் வேறு பெயர்கள்

இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய வேறு பெயர்களும் உண்டு.

அம்மான் பச்சரிசி வகைகள்

அம்மான் பச்சரிசி பூக்களின் நிறங்களின் அடிப்படையில் பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி, வயம்மாள் பச்சரிசி போன்ற பெயர்களில் அழைக்கபடுகின்றன.

அம்மான் பச்சரிசியின் மருத்துவ பயன்கள்

நீர்கடுப்பு சரியாகும்

அம்மான் பச்சரிசியை ஒரு கோலி குண்டு அளவு எடுத்து நன்றாக அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்கடுப்பு, நமைச்சல் ஆகியவை குணமாகும். இதன் பாலை நகசுத்தி மேல் பற்று போல போட நகசுத்தி குணமாகும். இதன் இலைகளை அரைத்து படைகளின் மேல் பூசினால் படைகள் குணமாகும்.

உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதத்தை போக்கும் குணம் உண்டு. உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து தாது விருத்தி ஏற்படும். இதை வெள்ளி பஸ்பம் என்றும் கூறுவார்கள்.

குழந்தைகளின் வயிற்று பிரச்சனைகளை போக்கும்

அம்மான் பச்சரிசியின் இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து 5 – 7 கிராம் அளவு மோரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலசிக்கலை போக்கும். மேலும் குழந்தைகளின் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்த்து, வயிற்று பூச்சிகளையும் கொல்லும்.

உஷ்ணத்தை போக்கும்

அம்மான் பச்சரிசி இலையை அரைத்து சுமார் சிறிதளவு பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுத்தால் வெயிலினால் ஏற்படும் வேட்டை, மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் உஷ்ணம் ஆகியவை போகும்.

உடல் பலத்தை அதிகரிக்கும்

இதன் இலைகளை சமைத்து சாப்பிட்டால் உடல் வறட்சி நீங்கும். பனியினால் ஏற்படும் வாய், நாக்கு, உதடு, வெடிப்பு குணமாகும். இதை தூதுவளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமாகும்.

முகம் பொலிவு பெறும்

இதன் பாலைத் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, மற்றும் பால்பருக்கள் மறையும். கால் ஆணி வலி குறையும். இதன் இலையை நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து பசும் பாலில் கலக்கிக் காலை வேளையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, போன்றவை குணமாகும்.

தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்

குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இவர்கள் தாய்ப்பால் அதிகம் சுரக்க, அம்மான் பச்சரிசி பூக்களை பசும்பால் விட்டு அரைத்து, பசும்பாலிலேயே கலந்து காலை வேளைகளில் பருகி வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்க அம்மான் பச்சரிசியின் இலையை அரைத்து மோரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் 3 முதல் 5 நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...
உடல் சூட்டை குறைக்க வழிகள்

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூடு எதனால் ஏற்படுகிறது? இன்றைக்கு பலருக்கும் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உடலில் சூடு. உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து நாம் தப்பித்து விடலாம்....
அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால் வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும்...
chinese garlic chicken

சைனீஸ் கார்லிக் சிக்கன்

சைனீஸ் கார்லிக் சிக்கன் தேவையான பொருட்கள் 1. சிக்கன் – ½  கிலோ ( எலும்பில்லாதது ) 2. மைதா – 3 ஸ்பூன் 3. சோள மாவு – 3 ஸ்பூன் 4. உப்பு - தேவையான அளவு 5....
போட்டிக் குழம்பு

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும்...
ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? ஸ்திரீ என்றால் பெண் என்று அர்த்தம், தீர்க்கம் என்றால் முழுமையான அல்லது இறுதியான என்று அர்த்தம். ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்பது பொருள் வளத்தையும், செல்வத்தையும், செல்வாக்கையும்...
கற்றாழை வளர்ப்பது எப்படி

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.