புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன

நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. முன்னோர்களுக்கு முறையாக ஈமக்கடன்கள் செய்யாமல் இருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும் என கூறப்படுகிறது.

புத்திர தோஷம்

முற்பிறவியில் ஆன்மீகவதிகள், அடியார்கள், மகான்கள் போன்றோரை மதிக்காமல் அவமானப்படுத்தியிருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். அந்தணரைக் கொன்றாலோ, குல தெய்வக் குற்றத்தாலோ, மரங்களை காரணமின்றி வெட்டியிருந்தாலோ புத்திர தோஷம் ஏற்படும். புத்திர தோஷம் ஏற்பட்டால், பிறக்கும் குழந்தை உடல் வளர்ச்சியற்ற குழந்தையாகவோ, உடல் ஊனமுற்ற குழந்தையாகவோ பிறக்கும், அல்லது குழந்தை பாக்கியமே இருக்காது.

புத்திர தோஷத்தை எவ்வாறு கண்டறிவது

புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு ஜாதகத்திற்கும் மற்றும் லக்னத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5-ம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். ஆண், பெண் இருவருக்கும் திருமணதிற்கு நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது போது ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என அலசி ஆராய்வது அவசியம். புத்திரஸ்தானமான 5-ம் இடம் பாதிக்கப்பட்டால், குழந்தை பேறு உண்டாவதில் பலவித தடைகள் ஏற்படும்.

புத்திரதோஷமானது ஒவ்வொரு லக்னத்துக்கும் எந்த எந்த கிரகங்களால் ஏற்படுகிறது என்பதைப் பின்வருமாறு பார்ப்போம்.
லக்னப்படி புத்திர தோஷம்

மேஷ லக்னம்

மேஷ லக்னத்திற்கு 5-ம் இடம் சிம்மம். சிம்மத்தின் அதிபதியான சூரிய பகவான் கன்னி, துலாம், விருச்சகம், மீனம் போன்றவற்றில் இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்திற்கு 5-ம் இடமான கன்னி. கன்னியில் சுக்கிர பகவான் இருந்தாலும், மேலும் புதன் துலாம், மேஷம், தனுசில் இருந்தாலும் புத்திர தடை ஏற்படும்.

மிதுன லக்னம்

மிதுன லக்னத்திற்க்கு 5-ம் இடம் துலாம். துலாமின் அதிபதி சுக்கிரன் பகவானவார். சுக்கிரன் 5-ம் இடமான கன்னியில் இருந்து, துலாமில் சூரியன் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.

கடக லக்னம்

கடக லக்னத்தின் 5-ம் இடம் விருச்சகம். லக்னாதிபதி விருச்சகத்தில் இருந்து, செவ்வாய் கடகத்தில் நின்றால் புத்திர தடை உண்டு. அதுமட்டுமல்லாமல் விருச்சகத்தில் புதன் இருந்து, கேது மற்றும் சனி போன்ற கிரகங்கள் இருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகும்.

சிம்ம லக்னம்

சிம்ம லக்னத்தின் 5-ம் இடம் தனுசாகும். தனுசின் அதிபதியான குரு 6-ம் இடமான மகரத்தில் இருந்தாலும், 6-ம் இடத்திற்கு உரிய சனி பகவான் தனுசில் இருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகும்.

கன்னி லக்னம்

கன்னி லக்னத்திற்கு 5-ம் இடம் மகரம். மகரத்தில் சனி இருப்பது தோஷமில்லை என்றாலும் சூரியனுடன் இணைந்து இருந்தால், 5-ம் இடமும் 5-ம் பாவாதிபதியும் கெடுகிறார், எனவே இதுவும் புத்திர தோஷ அமைப்பாகும்.

துலாம் லக்னம்

துலாம் லக்னத்திற்கு 5-ம் இடம் கும்பம். கும்பத்தின் அதிபதியான சனி பகவான் மேஷத்தில் இருந்து, கும்பத்தில் செவ்வாய் நின்றாலோ, சனி கன்னி ராசியில் இருந்து கும்பத்தில் குரு பார்வை செய்தாலோ, செவ்வாய் சிம்மத்தில் நின்று பார்த்தாலோ புத்திரதோஷம் ஏற்படும்.

விருச்சக லக்னம்

விருச்சக லக்னத்தின் 5-ம் இடம் மீனமாகும். மீனத்தில் சனி இருந்து, மகரத்தில் குரு சஞ்சாரம் செய்தால் தோஷம் ஆகும். மீனத்தில் குரு இருந்து மகரத்தில் சனி நின்றாலும், அது புத்திர தோஷம் கொண்ட அமைப்பாகும்.

தனுசு லக்னம்

தனுசு லக்னத்தின் 5-ம் இடம் மேஷ ராசியாகும். மேஷத்தின் அதிபதியான செவ்வாயுடன் சனி தொடர்பு இருந்தாலோ, செவ்வாய் 8-ம் இடத்தில், சனி 5-ம் இடமான மேஷத்தில் இருந்தாலும் அது புத்திர தோஷம் கொண்ட அமைப்பாகும்.

மகர லக்னம்

மகர லக்னத்தின் 5-ம் இடம் ரிஷபமாகும். ரிஷபத்தின் அதிபதியான சுக்கிர பகவான் கன்னியில் நீச்சமடைந்து, 5-ல் ராகு, கேது, சூரிய பகவான் போன்றோருடன் இணைந்து இருந்தால் அது புத்திர தோஷமாகும்.

கும்ப லக்னம்

கும்ப லக்னத்திற்கு 5-ம் இடம் மிதுனம். மிதுனத்தில் சந்திரன் இருந்து, மீனத்தில் புதனும் நின்று பாவ கிரகங்கள் பார்த்தால் புத்திர தடை ஏற்படும்.

மீன லக்னம்

மீன லக்னத்துக்கு 5-ம் இடம் கடகம். கடகத்தில் சூரிய பகவான் சஞ்சரித்தாலோ, சுக்கிரன், சனி போன்றவர்கள் சஞ்சரித்தாலோ புத்திரதோஷம் ஏற்படும்.

புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷதிற்க்கான பரிகாரம்

புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் பரிபூரண ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும். மேலும் முதியோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவதால் அவர்களின் ஆசிபெற்று தோஷ நிவர்த்தி பெறலாம்.

வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும், ஏழை உடல் ஊனமுற்றோருக்கு தங்களால் முடிந்த தானம் செய்வதன் மூலமும் பரிகாரம் செய்யலாம்.

மகான்கள் மற்றும் ஞானிகளின் ஆசிரமத்துக்கு பொருள்கள் தானம் செய்வதன் மூலமும், விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலமும், மரம் நட்டு வளர்ப்பதன் மூலமும் பரிகாரம் தேடலாம். மேலும் ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, மருத்துவ உதவி, பசுக்களை பூஜித்து கோசாலை அமைத்து பராமரித்தல் போன்றவை புத்திர தோஷதிற்கான பரிகாரங்கள் ஆகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூச்சுபயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...
அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட் இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும்...
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள்

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள் சரும அழகை மேம்படுத்த நாம் செய்யும் சில விஷயங்கள் சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் சரும நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. இரவில் தயிருடன் சிறிதளவு...
puzzles

Puzzles with Answers | Puthirgal | Brain teasers

புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள் மற்றும் விடைகளுடனும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.