புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம்

திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு கிடைக்கும். இன்னும் ஒரு சிலருக்கோ குழந்தை பாக்கியம் என்பது எட்டக் கனியாகி விடுகிறது. ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனப்படும் 5ம் இடம் பலமாக இருந்தால் புத்திரபாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

புத்திர தோஷம் நீங்க

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் கண்டிப்பாக புத்திர பாக்கியம் உண்டு. ஒரு சிலர் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் அவர்களுக்கு நோய் வாய்ப்பட்ட குழந்தைகள் பிறப்பார்கள். பெற்றோருக்கு கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனிப்பு கிடைப்பது போய் கடைசி வரைக்கும் பிள்ளைகளை இவர்கள் கவனிக்க வேண்டியிருக்கும் இதற்குக் காரணம் புத்திர தோஷம்தான். குழந்தை பிறப்பதற்கு ஜாதக ரீதியாக என்ன காரணங்கள் உள்ளன, அவற்றை எப்படி தீர்க்கலாம் என்பது பற்றி பின்வருமாறு விரிவாக பார்க்கலாம்.

யாருக்கெல்லாம் புத்திர பாக்கியம் கிடைக்கும்

ஜாதகத்தில் 5ல் சூரியன் இருந்தால் ஆண் குழந்தை உண்டாகும். அதுவே சந்திரன் 5ல் இருந்தால் பெண் குழந்தை உண்டாகும். 5ல் செவ்வாய் அல்லது புதன் இருந்தால் வாரிசு உண்டாகும். சுக்கிரன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் இருந்தால் குழந்தை பிறப்பில் தாமதமாகலாம். 5ல் ராகு இருந்தால் நிறைய குழந்தை பாக்கியம் உண்டாகும். 5ல் கேது இருந்தால் புத்திர பாக்கியம் தாமதமாகும்.

புத்திரர்களால் செல்வம், செல்வாக்கு யோகம் யாருக்கு அமையும்?

தந்தையின் லக்னத்திற்கு 5,7,9,10 போன்ற வீடுகளில் லக்னமாக அமைய பிறந்த குழந்தைகள் மற்றும் சூரியன் 6,8,9,12 போன்ற இடங்களில் பலமில்லாமல் பிறந்த குழந்தைகளால் பெற்றோர்களுக்கு யோகம் உண்டாகும்.

சிம்ம வீட்டில் இராகு, செவ்வாய், கேது, சனி போன்ற அசுப கிரகங்கள் இல்லாத நிலையில் உள்ள குழந்தைகள், சூரியன், ராகு இணைந்து சஞ்சரிக்காத நிலையிலும் பெற்றோர்களுக்கு பேரும், புகழும் கிடைக்கும். இது போன்ற நிலைகளில் பிறக்கும் குழந்தைகளினால் பெற்றோர்கள் அனைத்துவிதமான செல்வம், செல்வாக்கு யோகம் பெறும் வாய்ப்புகள் உள்ளது என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

புத்திர தோஷம் நீங்க பரிகாரங்கள்

1. குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் புத்திர தோஷம் விலகும். முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்து வழிபட்டாலும் புத்திர தோஷம் நீங்கும்.

2. ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளதால், சஷ்டி திதி முருகனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சிவ மைந்தன் முருகனை சஷ்டி திதியில் வணங்கி வந்தால், குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

புத்திர தோஷம்

 

3. எந்தக் கிரகத்தால் புத்திர தோஷம் உண்டானதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புத்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

4. பௌர்ணமி, தமிழ்மாத பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி உண்டாகும். திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்து வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

5. ஏழைக் பிள்ளைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

6. குலதெய்வ கோவிலில் அவரவரின் ஜென்ம நட்சத்திரம் வரும் தினங்களில் அன்னதானம் செய்து வந்தால் புத்திரத் தோஷம் நீங்கி குழந்தை பேறு கிடைக்கும்.

7. பிரதோஷம் வரும் நாட்களில் அபிஷேகம் செய்து வந்தால் புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

புத்திர தோஷ பாதிப்பு குறைய செல்ல வேண்டிய கோவில்கள்

1. அருள்மிகு சோமநாதர் திருக்கோவில், நீடூர், நாகப்பட்டினம்.
2. அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருவடிசூலம், காஞ்சிபுரம்.
3. அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோவில், பாரியூர், ஈரோடு.
4. அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர், கரூர்.
5. அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில், உறையூர், திருச்சி.
6. அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில், குடவாசல், திருவாரூர்.
7. அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில், இலுப்பைக்குடி, சிவகங்கை.
8. அருள்மிகு வீரசேகரர் திருக்கோவில், சாக்கோட்டை, சிவகங்கை.
9. அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோவில், திருப்பள்ளி முக்கூடல், திருவாரூர்.
10. அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோவில், இடைக்காட்டூர், சிவகங்கை.
11. அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம், மதுரை.
12. அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர், திருச்சி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்? திருமண வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். அதில் அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இல்வாழ்க்கையில் பரஸ்பரம் கணவன், மனைவி இடையே...
செம்பருத்திப் பூ டீ

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை டீ வகைகள்

ஆரோக்கியமான  மூலிகை டீ வகைகள் தண்ணீருக்கு பிறகு நாம் அதிக அளவில் குடிக்க கூடிய பானம் என்ன என்றால் அது டீ தான். டீ குடிக்காமல் அன்றைய நாளே முழுமை பெறாது என்று நினைப்பவர்களும்...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...

தித்திக்கும் கோவில் சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் பாகு வெல்லம் – 1 கப் பாசி பருப்பு – ¼ கப் நெய் – 100 கிராம் ஏலக்காய் – சிறிதளவு ...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...
காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.