ஆரோக்கியமான வாழ்விற்கு எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்
ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு தூக்கமும் மிக முக்கியமாகும். தூக்கத்தின் முக்கியத்துவத்தை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம். ஆரோக்கியமான வாழ்விற்கு சரியான தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும்
நல்ல ஆரோக்கியமான தூக்கத்தால் நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தூக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க மிகவும் அவசியமானது.
ஒருவர் சரியாக தூங்கவில்லை என்றால் உடலில் பல நோய்களை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. போதுமான தூக்கம் இல்லாததால் நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்
பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர் வரை, அனைவருக்கும் குறைந்தது ஒன்பது முதல் பன்னிரண்டு மணிநேர தூக்கம் அவசியமாகும்.
- 4 மாதம் முதல் 12 மாதங்கள் வரை உள்ள குழந்தைகள் தினமும் 12-16 மணிநேரம் தூங்க வேண்டும்.
- 1-2 வயதுக்குள் உள்ள குழந்தைகள் 11-14 மணிநேரம் தூங்க வேண்டும். 3-5 வயதுக்குள் உள்ள குழந்தைகள் தினமும் 10-13 மணிநேரம் தூங்க வேண்டும்.
- 6-12 வயதுக்குள் உள்ள குழந்தைகள் 9-12 மணிநேரம் தூங்க வேண்டும்.
- 13-18 வயதுக்குள் உள்ள குழந்தைகள் 8-10 மணிநேரம் தூங்க வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டோர் தினமும் 7-9 மணிநேரம் தூங்குவது போதுமானதாகும்.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7-8 மணிநேரம் தூங்குவது அவசியம் என ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தூக்கமின்மையால் ஏற்படும் சிக்கல்களில் கவனக்குறைவு, மனச்சோர்வு, எடை கூடுதல், இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சினைகள் வந்து சேரும். குறிப்பாக, பால்ய பருவத்திலும், இளமையிலும் அதிக அளவிலான தூக்கம் உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது. தூக்கக்குறைவு உடல் செயல்பாடுகளை பாதிக்கக்கூடியது.
எனவே, ஆரோக்கியமான தூங்கும் பழக்கத்தை வளர்க்கும் விதமாக, ஒவ்வொருவரும் தங்கள் வயதுக்கேற்ற நேரத்தில் தூங்க வேண்டும்.