அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால்

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும் அமில பாட்டில்களை தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் அறியாமல் குடித்துவிடவும், உடலின் மீது கொட்டிவிடவும் வாய்ப்பு உண்டு.

அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமிலங்கள் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல், நமைச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும் மேலும் அரிப்பு ஏற்படும். கொப்புளம் ஏற்படவும் வாய்புகள் உண்டு. இதனால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம். ஒரு சிலர் அமிலத்தை தெரியாமல் குடித்து விடுவர். இதனால் குடித்தவருக்கு கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக் கூட விழுங்க முடியாது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம், மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்படலாம். அது போன்ற சமயத்தில் அமில பாதிப்பு ஏற்பட்டவருக்கு எப்படிப்பட்ட முதலுதவிகள் செய்யலாம் என்று பின்வருமாறு பார்க்கலாம்,

அமில விபத்துக்கான முதல் உதவிகள்

அமிலத்தை குடித்துவிட்டால்

அமில பாதிப்பு ஏற்பட்டவரின் ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும். வாயைத் நல்ல சுத்தமான தண்ணீரால் கொப்பளிக்க வேண்டும். பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். மருத்துவமனைக்குச் செல்லும் போது, அந்த நபர் தவறுதலாக குடித்த அந்த அமில பொருளையும் எடுத்து செல்ல வேண்டும். மருத்துவர் அந்த அமிலத்தின் வீரியத்தை வைத்து தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வார். இதனால் சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.

தோலில் அமில பாதிப்பு ஏற்பட்டால்

தோலில் அமிலம்பட்டிருந்தால், சுத்தமான தண்ணீரை வைத்து அமில பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலை நன்றாகக் கழுவ வேண்டும். கழுவும் போது சோப்பை பயன்படுத்தகூடாது. ஏனெனில் சோப்பில் உள்ள வேதிபொருட்கள் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலில் வேதிவினை புரிந்து மேலும் சிக்கலை உண்டாக்கலாம்.

தோல் பகுதியில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கி பின்பு பிழிந்து, அதைத் பாதிப்பு ஏற்பட்ட தோலில் சுற்றலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

கண்களில் அமில பாதிப்பு ஏற்பட்டால்

அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் நன்றாக கழுவவேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் நன்றாக திறந்து மூடச் செய்யலாம்.
மேலும், இமைகளை விலக்கி, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம். அமிலம் பாதிப்பு ஏற்படத் கண்ணில் சொட்டு மருந்தை எக்காரணம் கொண்டும் ஊற்றக்கூடாது.

சம்பந்தப்பட்டவரை வாந்தி எடுக்க வைக்கக்கூடாது. வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது. வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம். பின்பு மருத்துவமனையை நாடலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆண் மலட்டு தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள் நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு - பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர்...
விஜயதசமி சிறப்புகள்

விஜயதசமி வழிபாட்டின் பலன்கள் மற்றும் பயன்கள்

விஜயதசமி வழிபாடு அகில உலகத்தையும் காக்கக்கூடிய அம்பிகையானவள்  சக்தி, லக்ஷ்மி, சரஸ்வதி என மூன்று தேவிகளின்  சொருபமாக அவதரித்து மகிஷாசுரன் என்ற அரக்கனிடம் 9 நாட்கள் போர் புரிந்து பின் 10 வது நாளில்...
pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் அதிமதுரம் செடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். காடுகளில் புதர் செடியாக வளரும். மிதமான சீதோஷ்ணத்தில் வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலையைக் கொண்டது....
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க

கோடை வெயிலில் இருந்து உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

சரும பராமரிப்பு கோடை காலத்தில் அதிக அளவில் பாதிக்கப்படுவது நமது சருமம் மற்றும் தலைமுடி தான். கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் உடலில் நீர்ச்சத்து குறைந்தது உடல் சோர்வடைந்து பொலிவிழந்து காணப்படும். வெயிலின் தாக்கத்தில் இருந்து ...
அட்சதை போடுவது எதற்காக

திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்? திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும்...

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.