இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி

அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அந்த வகையில் வீட்டிலேயே சுவையான இறால் பிரியாணி  எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

இறால் பிரியாணி செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. பிரியாணி அரிசி – ½ கிலோ
  2. இறால் – ¼ கிலோ
  3. வெங்காயம்  – 3
  4. தக்காளி –  2
  5. பச்சை மிளகாய் – 4
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  9. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  10. கொத்தமல்லித் தழை –  1 கைப்பிடி
  11. புதினா – 1 கைப்பிடி
  12. தயிர் – ¼ கப்
  13. உப்பு – தேவையான அளவு
  14. எண்ணெய் – தேவையான அளவு
  15. நெய் – தேவையான அளவு
  16. பட்டை – 2 துண்டு
  17. கிராம்பு – 4
  18. சோம்பு – 1 ஸ்பூன்
  19. பிரியாணி  இலை – 2

செய்முறை

  1. முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பிரியாணி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
  3. பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  5. தாளித்த பின் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  6. பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லித் தழை, மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
  8. பின்னர் தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. எடுத்து வைத்துள்ள ¼ கப் தயிரை சேர்த்துக் கொள்ளவும்.
  10.  சுத்தம் செய்து வைத்துள்ள  இறாலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும்.
  11. இறால் சிறிது நேரம் வெந்த பிறகு ஊற வைத்துள்ள பிரியாணி அரிசியை நன்கு கழுவி பின் சேர்த்துக் கொள்ளவும்.
  12. அரிசியை சேர்த்து பின் மெதுவாக கிளறி விடவும்.
  13. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  14. கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  15. உப்பு, காரம் சரிபார்த்த பிறகு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால் சுவையான இறால் பிரியாணி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

how to make somas

சுவையான மொறு மொறு சோமாஸ் செய்வது எப்படி ?

சோமாஸ் தேவையான பொருட்கள் மைதா - 1 கப் உப்பு - சிறிதளவு உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு பூரணம் செய்ய ரவை...
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம் சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் சித்திரை 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி மற்றும் அதிபதி - கன்னி :...

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவானவார். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களை கண்டு பிறர்...
அஷ்டமி திதி பலன்கள்

அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை...
riddles and brain teasers

Riddles and Puzzles with answers | Riddles and Brain Teasers with Answers

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
மெனோபாஸ் என்றால் என்ன

மெனோபாஸ் அறிகுறிகள் மற்றும்  பாதுகாப்பு நடவடிக்கைகள்

மெனோபாஸ் அறிகுறிகள் மற்றும்  பாதுகாப்பு நடவடிக்கைகள் மெனோபாஸ் என்றால் என்ன? மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்வில் மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நிற்கும் ஒரு இயற்கையான காலகட்டமாகும். பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் நிகழும், ஆனால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.