உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள்

நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைய நவீன வாழ்க்கை சூழலில் பலரும் வெளியில் வீட்டில் சமைக்கப்படும் உணவை விட வெளியில் சென்று சாப்பிடுவதையே பெரிதும் விரும்புகின்றனர். வெளியில் சென்று சாப்பிடும் உணவில் போதுமான அளவு சத்துக்கள் இருக்கிறதா, சுத்தமாக செய்யப்பட்டதா, நம் உடலுக்கு ஏற்றதா, பாதுகாப்பானதா  என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சத்துக் குறைபாட்டினால் பாதிக்கபடுகின்றனர். மன அழுத்தம், வளர்ச்சி குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, மலச்சிக்கல்  போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்க்கு காரணம் நம் உடளுக்கு தேவையான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தான்.

நார்ச்சத்துள்ள உணவு வகைகள் பொதுவாக நாம் சாப்பிடும் உணவு, நம் உடலுக்கு ஊட்டம் தருகிற வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பைட்டோகெமிக்கல்கள் மற்றும் என்ஸைம்கள் அடங்கிய ஒரு உணவாக இருக்க வேண்டும். எனவே நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள உணவை நம் அன்றாட உணவில் இடம்பெற செய்ய வேண்டும்.

இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன.ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து மற்றொன்று கரையாத நார்ச்சத்து. கரையும் நார்ச்சத்து நீரில் கரைகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. கரையாத நார்ச்சத்து நீரில் கரைவதில்லை. இது, குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ள சில உணவுப் பொருட்களை பார்க்கலாம்.

நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பேரிக்காய்

இந்த பழத்தில் 3.1g அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் இவற்றில் கலோரிகள் மற்றும் புரதசத்து உள்ளது. இந்த பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஜூஸில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. நெல்லிக்கையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும், மூளை சுறுசுறுப்பாக செயல்படும்,செரிமானத்தை எளிதாக்கும்.

அவகாடோ

அவகாடோவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சக்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் ஆப்பிள்

ஆப்பிள் விட்டமின்கள், நார்ச்சத்து, புரதங்கள், தாதுக்கள் போன்ற பல சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். ஆப்பிளின் தோலில்தான் அற்புதமான ஆன்டிஆக்ஸிடன்ஸ் நிறைந்துள்ளன. ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. ஒரு கப் ஆப்பிளில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை அதிகரிப்பதற்கு உதவுகின்றது.

பாசிப்பயறு

பாசிப்பயிற்றில் அதிகமான நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. 100 கிராம் பாசிப்பயறில் 16 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினசரி தேவையான நார்ச்சத்து பாசிப்பயிற்றிலேயே அடங்கியுள்ளது. கருவுற்ற பெண்களுக்கு வேகவைத்த பாசிப்பயறை தினமும் கொடுத்து வந்தால் உடல் வலுபெறும். எளிதில் ஜீரணமாகும்.

வாழைப்பழம்

100g வாழைப்பழத்தில் 2.6g அளவு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்  மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.

கொய்யாப் பழம்

கொய்யாப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள பழமாகும். கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து கிடைத்து விடும்.

நார்ச்சத்து உணவுகள் பாதாம்

நட்ஸ் வகைகளில் பாதாமில் தான் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.  தினமும் ஒரு கைப்படி பாதமை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அஜீரணக் கோளாறைப் போக்கி உணவை நன்கு செரிமானம் அடையச் செய்கிறது.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் கேரட்,பீட்ரூட்

கேரட் மற்றும் பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே வாரத்தில் 2 முறை இவற்றை  உணவாகவோ ஜூஸாவோ சாப்பிடுவது மிகவும் நல்லது.  தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த உற்பத்தி அதிகரிக்கவும் மற்றும் செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : மகேஸ்வரன் திருவாதிரை நட்சத்திரத்தின் பரிகார...
திருமண தோஷம்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஜாதகத்தில் இருக்கிற கிரகங்கள் தான் ஒருவரை யோகம் உள்ளவராகவும், யோகம் அற்றவராகவும் மாற்றுகிறது. அதே போல தான் ஒவ்வொரு ஜாதகருக்கும் தோஷம் அமைகிறது. நாம் முந்தைய பிறப்பில் செய்த...
குபேர எந்திரம்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள் தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும். தீபாவளி...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.