வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான சத்தான உணவோடு உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும்

வரகு நெல்லிக்காய் சாதம் 

தேவையான பொருட்கள்

  • வரகரிசி – 1 கப்
  • பெரிய நெல்லிக்காய் – 5
  • வர மிளகாய் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • கடுகு – ¼ ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – ½ ஸ்பூன்
  • பெருங்காயம் – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • செய்முறை
  • முதலில் வரகரிசியை நன்கு சுத்தம் செய்து களைந்து ½ மணி நேரத்திற்கு ஊறவைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர்விட்டு நன்கு கொதிவந்ததும் வரகரிசியினை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வேகவிட வேண்டும்.
  • வரகரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து நீரினை நன்கு வடித்து விடவும். இப்பொழுது வரகு சாதம் தயார். இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் சேர்த்து நன்றாக ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
  • பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்னர் அதனுடன் துருவி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
  • சிறிது நேரம் வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நெல்லிக்காய் கலவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வரகு நெல்லிக்காய் சாதம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

9ம் எண் குணநலன்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமையும்,...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...
விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது....
கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம்

கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம் முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் மிக முக்கியத்துவம் வயந்ததாக கருதப்படுகிற நிலையில், சஷ்டி விரதம் இருப்பது எதற்காக என்றும், அதன் பலன் குறித்தும் தெரிந்து கொள்வோம். சஷ்டி விரதத்தின் நோக்கம் ஐப்பசி...
வைகாசியில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் பன்னிரண்டு மாதங்களில் இரண்டாவதாக வரும் தமிழ் மாதம் வைகாசியாகும். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என...
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கிருத்திகை நட்சத்திரம் நட்சத்திரத்தின் இராசி: மேஷம் 1ம் பாதம், ரிஷபம் 2, 3 மற்றும் 4 ம் பாதம். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கான...
திரிதியை திதி

திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.