ஆப்பிள் பாயாசம் செய்முறை

ஆப்பிள் பாயாசம் 

ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது.  ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. ஆப்பிளில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை சரி செய்ய உதவும்.

ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்

  1. பால் – 1 லிட்டர்
  2. சர்க்கரை – 250 கிராம்
  3. இனிப்பு இல்லாத கோவா – 1 கப்
  4. ஆப்பிள் – 4
  5. நெய் – 2 ஸ்பூன்
  6. கண்டென்ஸ்டு மில்க் – ¼  கப்
  7. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  8. முந்திரி, திராட்சை , பாதாம் – தேவையான அளவு

செய்முறை

  1. ஆப்பிள் பாயாசம் செய்வதற்கு ஆப்பிளை தோல் சீவி அதில் உள்ள விதைகளை நீக்கி விடவும்.
  2. பின்னர் ஆப்பிளை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  4. நெய் சூடானதும் அதில் முந்திரி, திராட்சை, பாதாம், சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. பின்னர் அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது நெய் சேர்த்து துருவி வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  6. 1 லிட்டர் பாலை தண்ணீர் சேர்க்காமல் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  7. பால் காய்ந்தவுடன் அதில் கோவாவை நன்கு கட்டிகள் இல்லாமல் உதிர்த்து சேர்த்துக் கொள்ளவும்.
  8. பின்னர்  கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  9. சிறிது நேரம் கொதித்ததும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  10. சர்க்கரை நன்கு கரைந்ததும் நெய்யில் வதக்கி வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து கிளறி விடவும்.
  11. கடைசியாக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான ஆப்பிள் பாயாசம் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது....
உள்ளங்கை தரிசனம்

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

  காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில்...
உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன் பூசம் நட்சத்திரத்தின் பரிகார...
கறிவேப்பிலை டீ நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் நம் வீடுகளில் அன்றாட சமையலில்  பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகை கறிவேப்பிலையாகும்.  கறிவேப்பிலை சமையலுக்கு மட்டுமல்லாது மருந்தாகவும் பயன்படுகிறது. தினசரி உணவில் இதைப் பயன்படுத்துவது இயல்பானதுதான்,...
புகைப்படம் மாட்ட சிறந்த திசை

புகைப்படங்களை இந்த திசையில் மட்டும் மாட்டி வைக்காதீர்கள்

புகைப்படங்களை இந்த திசையில் மட்டும் மாட்டி வைக்காதீர்கள் நம் அனைவரது  வீட்டிலும் கட்டாயம் இடம்பெறும் ஒரு முக்கிய பொருளாக இருப்பது புகைப்படம். புகைப்படம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்ல நினைவுகளை நினைவூட்டக்கூடிய அழகிய...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.