புரதச்சத்து நிறைந்த கம்பு அல்வா

கம்பு அல்வா

கம்பு ஒரு புரதச் சத்து நிறைந்த உணவாகும்.தினமும் இட்லி, தோசை சாப்பிடுவதை தவிர்த்து கம்மங்கூழ்,கம்பு அடை, கம்பு தோசை என கம்பை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறு குழந்தைகளுக்கு கம்பை இது போன்று அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

கம்பு அல்வா செய்முறைதேவையான பொருட்கள்

  •  கம்பு – 1 கப்
  • நெய் – தேவையான அளவு
  • நாட்டுச் சர்க்கரை – 1 கப்
  • உப்பு – சிறிதளவு
  • முந்திரி, திராட்சை – சிறிதளவு
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஒரு கப் கம்பு தானியத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • சுத்தம் செய்த காம்பினை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஊற வைத்த காம்பினை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
  • அரைத்த விழுதுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள கம்பு பாலை சேர்த்துக் கொள்ளவும்.
  • இந்த பாலை முதலில் ஒரு அகலமான கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மிதமான தீயில் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.
  • நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.
  • கெட்டியான பதத்திற்கு வந்ததும் 1 கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். உப்பு சேர்ப்பதால் இனிப்பு சுவை சற்று கூடுதலாக தெரியும்.
  • வாசனைக்காக சிறதளவு  ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  • ஏலக்காய் சேர்த்ததும் தேவையான அளவு நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை கிளறி விடவும்.
  • இறுதியாக சிறிதளவு முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சத்தான கம்பு அல்வா ரெடி.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 எப்படி செய்வது ?

சிக்கன் 65 செய்வது எப்படி? சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர்...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...
யோகங்கள் 27

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #5

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
மஞ்சள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள்...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
கும்ப ராசி குணநலன்கள்

கும்ப ராசி பொது பலன்கள் – கும்ப ராசி குணங்கள்

கும்ப ராசி குணங்கள் கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சதயம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.