சகுனங்கள் என்றால் என்ன?  சகுனம் பார்ப்பது நல்லதா? கெட்டதா?

சகுனங்கள் என்றால் என்ன?  சகுனம் பார்ப்பது நல்லதா? கெட்டதா?

சகுனம் என்பது எதிர்காலத்தை முன்னறிவிப்பதாக நம்பப்படும் ஒரு நிகழ்வு ஆகும். சகுனத்தில் ‘ நல்ல மற்றும் தீய சகுனங்களை என இரண்டு வகைகள் உள்ளன. சகுனங்களால் ஏற்படும் நல்ல மற்றும் தீய செயல்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஏதேனும் ஒரு முக்கியமான செயலைச் செய்யப் புறப்படும் சமயத்தில், நம் எதிரே தென்படும் காட்சிகளைக் கொண்டு நாம் செய்ய போகும் செயல் வெற்றி பெறுமா? என்பதை கணித்துக் கொள்ள இயலும். இதைத் தான் பெரியோர்கள் சகுனங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக இந்தச் சகுனங்கள் என்பது சுப சகுனம் மற்றும் அசுப சகுனம் என இரு வகைப்படும். நாம் புறப்படும் சமயத்தில் சுப சகுனம் நமக்கு எதிரே தென்பட்டால் நாம் செய்ய இருக்கும் செயல் கண்டிப்பாக வெற்றி பெறும். அதுவே அசுப சகுனங்கள் தென்படுமாயின் நாம் செய்ய இருக்கும் செயல் தோல்வியில் கூட முடியக்கூடும். இந்நிலையில், எது ‘சுப சகுனம்’ மற்றும் எது ‘அசுப சகுனம்’ என்பதைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

சகுனம் பார்ப்பது எப்படி 
சுப சகுனங்கள்

வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக் கேட்பதும் சுப சகுனங்கள் ஆகும். இவை தவிர அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி (அதாவது அக்ஷதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன், ஆலய மணி ஓசை, எரியும் விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் எதிரே வருவது போன்ற அனைத்துமே சுப சகுனங்கள் ஆகும்.

அசுப சகுனங்கள்

அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை, ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, மரம் வேருடன் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது, எருமை மாடு எதிரே வருதல் ஆகியவை அசுப சகுனமாகும்.

இவை மட்டும் அல்ல, பாம்பு அல்லது மற்ற விஷ ஜந்துக்கள், பன்றி, முயல், குயவன், குளிக்கும் பொருட்டு தலை நிறைய வழிய – வழிய எண்ணெய் தேய்த்துக் கொண்டு எதிரே வரும் நபர், ஈரத்துணி, உப்பு, இடறுதல் அல்லது கிளம்பும் சமயத்தில் அடி படுதல், துணி தானாக அவிழ்தல், அழுகை சத்தம், கலகம் – சண்டை சப்தம், தும்மல், “போகாதே அல்லது எங்கே போகிறாய்!” போன்ற வார்த்தைகள் அல்லது இதற்கு இணையான தடை சொல்லும் வார்த்தைகள் போன்ற இவை அனைத்தும் தீய சகுனங்களின் வெளிப்பாடு தான். மற்றபடி சகுனம் என்பது வேறு. நிமித்தம் என்பது வேறு.

நிமித்தம் என்றால்  நாம் ஒரு விஷயம் பேசிக்கொண்டிருக்கும்போதோ, ஒரு காரியம் நடத்திக் கொண்டிருக்கும்போதோ, பக்ஷிகள், விலங்குகள், பல்லி போன்ற ஜந்துக்களால் ஏற்படுத்தப்படும் ஒலிகள், சப்தங்கள், மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள், கண்கள் துடித்தல் ஆகியவைகளால் நம் மனதில் ஏற்படக் கூடிய உணர்வுகள் சம்பந்தப்பட்டவை இந்த நிமித்தங்கள்.

தானே ஏற்படும் இந்த நிமித்தங்களை நம்மால் மாற்ற முடியாது. சகுனம் என்பதும் இவற்றைப் போலவே இருந்தாலும், சில சமயம் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். உதாரணமாக நாம் வெளியே செல்லும் சமயத்தில் நம் வீட்டு சுமங்கலிப் பெண்ணை எதிரே வரும் படிச் செய்யலாம். இது நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நல்ல சகுனம். ஆனால், நிமித்தம் என்பது அது தானாக நடக்கக்கூடியவை.

சகுனம் ஏன் பார்க்க வேண்டும் இந்த சகுனம் அல்லது நிமித்தம் உண்மை தான் என்பதற்குப் புராணத்தில் இருந்து சில சான்றுகள் பின்வருமாறு.

  1. மகாபாரதத்தில், ஒரு முறை பாண்டவர்களின் இந்திரப்ரஸ்த அரண்மைக்கு துரியோதனன் வந்த சமயம். யுதிஷ்டிரனின் இடது கண் விடாமல் துடித்துக் கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் தான் துரியோதனன் இடறி நீர் தடாகத்தில் விழுந்தான். அதை பார்த்த பாஞ்சாலியின் வேலைக்காரி “குருடன் மகனும் குருடனாக இருக்கிறானே!” என்று சிரிக்க. அதைக் கேட்டு பாஞ்சாலியும் சிரிக்கிறாள். அந்த ஒற்றை சிரிப்பிற்கு அவள் பட்ட துன்பம் யாவரும் அறிந்ததே!
  1. சுந்தர காண்டத்தில் தூது சென்ற அனுமான் இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் சமயம் சீதையின் இடப்புறக் கண்கள் துடித்து நற்சகுனம் தந்ததாக ராமாயணத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இதன்படி, பெண்களுக்கு இடக் கண்கள் துடிப்பது நல்லது. ஆண்களுக்கு வலக்கண் துடிப்பது நல்லது. மாறாக, ஆண்களுக்கு இடக்கண் துடித்தால் நல்லதல்ல. அதேபோல, பெண்களுக்கு வலக்கண் துடித்தாலும் நல்லதல்ல. இப்படியாக நிமித்த சாஸ்திரம் கூறுகிறது.
  1. ஸ்ரீ ராமர் இலங்கையில் தனது வானர சேனைகளுடன் வந்து இறங்கிய சமயம் ராவணன் வாசித்துக் கொண்டு இருந்த வீணைக் கம்பிகள் அறுந்ததாக வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி பதியப்பட்டு இருக்கும். அதாவது, ராவணனின் கொடி வீணை. இந்நிலையில் “ராவணா! உன் கொடி அறுபடும் சமயம் ஸ்ரீ ராமன் மூலமாக வந்து விட்டது!” என்பதை வால்மீகி தனது ராமாயண காவியத்தில் அழகாக சித்தரித்து இருப்பார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
கரிசலாங்கன்னி கீரை

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள்...
ஜாதிக்காய் மருத்துவ நன்மைகள்

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

ஜாதிக்காய் வரலாறு ஜாதிக்காய் முதன் முதலில் மொலுக்கஸ் தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல்...
benifits of honey

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் இயற்கை நமக்கு அளித்துள்ள ஆரோக்கியமான பொருட்களில் மிகவும் அற்புதமானது தேன். தேனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தேன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். தேனில் பல  வகையான வைட்டமின்...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
மோதிரம் எந்த விரலில் அணியலாம்

சாஸ்திரப்படி எந்தெந்த விரல்களில் மோதிரம் அணியலாம்?

சாஸ்திரப்படி எந்தெந்த விரல்களில் மோதிரம் அணியலாம்? பொதுவாக மோதிரம் அணிந்து கொள்ளும் பழக்கம் நம் அனைவரிடமும் உள்ளது. இது பழங்காலம் முதலே நடைமுறையில் இருக்கும் வழக்கங்களில் ஒன்றாககம். அதிலும் தங்க மோதிரம் என்பது நம்முடைய...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.