பிரண்டை மருத்துவ குணங்கள்

பிரண்டை

பிரண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் ஒரு தாவர வகையாகும். இது கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது பொதுவாக வெப்பம் அதிகமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது. இது இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. பிரண்டையானது காடுகள், வேலிகள், புதர்களில் அதிகம் வளர்கிறது.

பிரண்டை உருவ அமைப்பு

சதைப்பற்றான இதன் தண்டு மூன்று, மற்றும் நான்கு பக்க விளிம்புகளை கொண்டது. இதன் பூக்கள் வெள்ளை நிறம் கொண்டது. இதன் பழம் கறுப்பு நிறமாக இருக்கும். இதன் சாறு உடலில் பட்டால் எரிச்சல் மற்றும் நமைச்சல் ஏற்படும்.

பிரண்டை செடி

மூன்று பட்டைகளைக் கொண்ட பிரண்டை வகை ‘திரிதார’ என்று அழைக்கபடுகிறது. இந்த பிரண்டை இனிப்புச் சுவை கொண்டது. மேலும் இலகு குணமும் வறட்சித் தன்மையும் கொண்டு இருக்கும்.
நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டையை ‘சதுர்தார’ என்று அழைப்பார்கள். இது உஷ்ண தன்மை கொண்டது.

பிரண்டை வகைகள்

பிரண்டையில் உருண்டை, சதுரவட்டை, முப்பிரண்டை, மூங்கிற் பிரண்டை, கோப்பிரண்டை, ஓலைப்பிரண்டை எனப் பல வகைகள் உள்ளது. இளம் தண்டு, இலை, வேர்கள் ஆகிய அனைத்துமே மருத்துவ பயன் கொண்டது.

பிரண்டையின் வேறு பெயர்கள்

நாம் பொதுவாக பிரண்டை என குறிபிட்டாலும் தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, கிரண்டை, அரிசிணி, வச்சிரவல்லி, வஜ்ராவல்லி என வேறு பல பெயர்களாலும் பிரண்டை அழைக்கபடுகிறது.

பிரண்டை குணங்கள்

பிரண்டையில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளதால் உடைந்த எலும்புகளை இணைக்கும் தன்மை உடையது. இதனைப் பதப்படுத்தி சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். பித்தத்தை வளர்க்கும், வாத கபங்களைத் தணிக்கும். வாய், உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய இவைகளில் ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் பிரண்டை நல்ல மூலிகை மருந்தாக விளங்குகிறது.

பிரண்டையின் மருத்துவப் பயன்கள்

ஜீரண மண்டலம் சீராக இருக்கும்

பிரண்டையின் தண்டுகளை நார் நீக்கி துவையல் அல்லது சட்னி போல செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டலம் வலுபெறும்.

வீக்கங்களை குறைக்கும்

பிரண்டை பிழிந்து வரும் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி கை பொறுக்கும் சூட்டில் சதை பிழற்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு, வீக்கம் போன்ற இடங்களில் பற்றுப்போட நல்ல நிவாரணம் கிடைக்கும். சுளுக்கு, உடல் வலி போன்றவை கூட சரியாகும்.

பேதி குணமாகும்

பிரண்டை உப்பு சிறிதளவு பாலில் கலந்து 3 வேளை குடிக்க கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி, நுரைத்த பச்சை பேதி போன்றவை குணமாகும்.

வாய்ப்புண் குணமாகும்

பிரண்டை உப்பை சிறிதளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு, சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை புண்கள்,தீராத நாட்பட்ட வயிற்றுவலி,மூலம்,மூல அரிப்பு,மலத்துடன் சீழ்,இரத்தம் வருதல் போன்றவை தீரும்.

பிரண்டை மருத்துவ பயன்கள்

நரம்பு தளர்ச்சி குணமாகும்

ஜாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, உடல் பலவீனம், தாது இழப்பு முதலிய பிரச்சனைகள் தீரும்.

உடைந்த எலும்பு விரைவில் கூடும்

எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் எலும்பு முறிவு குணமாக பிரண்டை வேரை உலர்த்தி பொடியாக்கி 1 கிராம் அளவு காலை, மாலை என இருவேளை கொடுத்துவர முறிந்த எலும்புகள் முறிந்த விரைவில் ஒன்று கூடும்.

இரத்த போக்கு குணமாகும்

மிளகு அளவு பிரண்டை உப்பை பசும் வெண்நெய்யில் குழைத்து காலை, மாலை என 2 வேளை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு, இரத்தம் தடைபடுதல், குத்துக் கடுப்பு போன்றவை குணமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம்...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
prawn recipe

இறால் ப்ரைட் ரைஸ்

இறால் ப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ வடித்த சாதம்  - 2 கப் ( பாஸ்மதி அரிசி ) வெங்காயம் – சிறிதளவு  ( மெல்லிதாக நறுக்கியது ) ...
பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...
சாலை விபத்து ஏற்பட்டால்

சாலை விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும்...
சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள்...
ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.