சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி

சிக்கன் மஞ்சூரியன்

அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். சிக்கன் ஆரோக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, மற்ற அசைவ உணவுகளை விட மலிவானது. சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட அனைவரும் விரும்புவர். சிக்கனை பாரம்பரிய முறையில் சமைப்பவர்களும் உண்டு, மேற்கத்திய மற்றும் சீனா உணவு முறையில் சமைப்பவர்களும் உண்டு. நாம் இன்று பார்க்க இருப்பது சீன முறையில் தயார் செய்யப்படும் சிக்கன் மஞ்சூரியன் உணவாகும்.

சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி

தேவையான பொருட்கள்

சிக்கன் பொரிப்பதற்கு

1. சிக்கன் – ¼ கிலோ (எலும்பில்லாதது)
2. இஞ்சி பூண்டு விழுது – 1 Tbs
3. சோளமாவு – 100 கி.
4. மிளகாய் சாஸ் – 2 Tbs
5. முட்டை – 1
6. மைதா – 1 Tbs
7. எண்ணெய் – தேவையான அளவு
8. உப்பு – தேவையான அளவு

கிரேவி செய்வதற்கு

1. பூண்டு – 10 பல் ( பொடியாக நறுக்கியது )
2. பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
3. குடைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
4. கிராம்பு – 2 No’s
5. தக்காளி சாஸ் – 1 Tbs
6. சோயா சாஸ் – 1 Tbs
7. சோள மாவு – 1 டீTbs
8. மிளகாய் சாஸ் – 2 Tbs
9. எலுமிச்சைச்சாறு – 2 Tbs
10. கொத்தமல்லி தழை – சிறிதளவு
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

1. முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 1 முட்டையை உடைத்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. முட்டையை கலந்த பின்பு அதில் 1 Tbs இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு, சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு கலக்கி கொள்ளவும்.
4. கலக்கிய பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். இந்த சிக்கனை ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
5. சிக்கனை பொரிக்க ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
6. ஊற வைத்த சிக்கனை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
7. ஒரு கடாயில் 2 Tbs எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
8. நன்கு வதங்கியதும் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளவும்.
9.பின்னர் பொறித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்துக் கொள்ளவும். சிக்கனை சேர்த்த பின் 2 நிமிடத்திற்கு நன்கு கிளறி விடவும்.
10. 1 Tbs சோளமாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கிரேவியுடன் சேர்த்துக் கொள்ளவும்.
11. தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும்.
12. 2 நிமிடம் கழித்து மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

காபி குடிப்பது நல்லதா

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ?

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சமயம் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர்....
தினப் பொருத்தம் என்றால் என்ன

தினப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

தினப் பொருத்தம் என்றால் என்ன? தினப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தம் ஆகும். தினப் பொருத்தம் என்பது கணவன், மற்றும் மனைவிக்கு இடையே தினசரி எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்....
நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன? நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி...
ஏகாதசி திதி

ஏகாதசி திதி பலன்கள், ஏகாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

ஏகாதசி திதி ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின்...
coconut barfi preperation

எளிமையான முறையில் தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ?

தேங்காய் பர்ஃபி தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 4...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.