ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு

மீன் குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மீன் குழம்பு என்றாலே காரமானதாகத்தான் இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு என்றால் நல்ல சுவையாக காரசாரமாக இருக்கும். வாங்க ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சுவையான மீன் குழம்பு தேவையான பொருட்கள்

  1. மீன் – 1/2 கிலோ
  2. பெரிய வெங்காயம் – 4
  3. இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன்
  4. தக்காளி – 3
  5. மஞ்சள் தூள்   – 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் – 2  ஸ்பூன்
  7. மல்லி தூள்  – 1 ஸ்பூன்
  8. புளி – 100 கிராம்
  9. உப்பு – தேவையான அளவு

குழம்பு தாளிக்க

  1. கடுகு – 1 தேக்கரண்டி
  2. சீரகம் – 1 தேக்கரண்டி
  3. வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் – 10
  5. பச்சை மிளகாய் – 2
  6. எண்ணெய் – தேவையான அளவு
  7. கறிவேப்பிலை – சிறிதளவு
  8. கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

  1. மீனுடன்  உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். புளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து  வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு அகலமான வாணலியில் எண்ணெயய்  ஊற்றிக் கொள்ளவும்.
  4. எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  5. வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. வெங்காயம் , தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  8. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  9. பின் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  10. குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து 2 கொதி வந்தவுடன் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் கிரேவி

ஹோட்டல் சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி

தக்காளி சிக்கன் கிரேவி இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடக்கூடிய ருசியான தக்காளி சிக்கன் கிரேவி சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம்...
அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...
மச்ச சாஸ்திர பலன்கள்

நவகிரக மச்சம் என்றால் என்ன? அவற்றின் பலன்கள் யாவை?

நவகிரக மச்சம் சிலருக்கு பிறக்கும்போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும். நவகிரக மச்சம் என்பது சூரியன் போன்ற வடிவிலோ, சந்திர வடிவிலே, இன்னும் சில விசேஷ நவகிரக குறியீடுகள் போலவே, உருவத்திலோ, வடிவத்திலோ, நிறத்திலோ,...
அவல் லட்டு செய்வது எப்படி

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – 1 கப் முந்திரி, திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஏலக்காய் – சிறிதளவு ...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...
கனப்பொருத்தம் என்றால் என்ன

கணப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

கணப் பொருத்தம் என்றால் என்ன? உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் வைத்தான் இறைவன். மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான குணங்கள் இருப்பதில்லை. அந்த குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த...
பிறந்த மாத பலன்கள்

நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவரா, உங்கள் பிறந்த மாத பலன்கள் இதோ

பிறந்த மாத பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.