திருமணத்தில் அம்மி மிதித்தல் சடங்கு ஏன் நடத்தபடுகிறது தெரியுமா

திருமணத்தில் அம்மி மிதித்தல்

இந்து திருமணங்களில் பல்வேறு சடங்கு, சம்பிரயதயங்கள் அந்த காலம் முதல் தற்போது வரை வழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல சடங்கு சம்பிரதாயம் தற்போது வழக்கில் இல்லா விட்டாலும் முக்கியமான ஒரு சில சடங்குகளை மக்கள் இன்றளவும் தம் குடும்ப திருமணங்களில் செய்து வருகின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று ‘திருமணத்தில் அம்மி மிதித்தல்’ மற்றும் அருந்ததி பார்த்தல். இந்த சடங்கை ஏன் செய்கிறார்கள் என்பது பல பேருக்கு இன்று வரை தெரிவதில்லை. இந்த அம்மி மிதித்தல் சடங்கை ஏன் செய்கிறார்கள் என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல்

நான்கு வாழ்கை முறைகள்  

இந்து மதத்தில் ‘பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம், என்று நான்கு வாழ்க்கை முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் கிரகஸ்தம் என்னும் இல்லறமே மிகவும் சிறந்ததென்று கௌதம முனிவர் கூறியுள்ளார். சிறப்புமிக்க கணவன் மனைவி எனும் பந்தத்தை வலுப்படுத்த திருமணத்தில் சில சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அம்மி மிதித்தல் ஆகும். அதன்படி திருமண சடங்கில் மணமகன் ஆனவன்  மணமகளின் வலது கால் கட்டை விரலைப் பிடித்து, அம்மிக்கு வலது புறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறார்.

இதன் அர்த்தம் இந்த கல்லின் மீது நீ ஏறி நிற்பாயாக, இந்தக் கல்லைப் போல் நீ மனம் கலங்காமல் திருமண வாழ்வில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களை பொறுத்து கொள்ள வேண்டும். இன்பமோ, துன்பமோ வாழ்வில் எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக் கொள் என்று கூறி மனோதத்துவ அடிப்படையில் மணமகன், மணமகளுக்கு மனோபலம் அளிக்கிறான்.

அம்மியை ஏன் உபயோகிக்க வேண்டும்

திருமணத்தில் அம்மியை ஏன் மிதிக்கிறார்கள்

எந்த ஓர் உலோகத்தையும் விடவும் கல்லானது மிகவும் உறுதியானது. கல்லை உலோகம் போல வளைக்கவோ, உருக்கவோ முடியாது. மணமகளுக்கு கல் போன்று உறுதியான நெஞ்சம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சடங்கிற்கு மிக உறுதியான கல்லால் செய்த அம்மியை உபயோகிக்கிறார்கள்.

இந்து மதத்தில் எந்த ஒரு காரியமும் காரணமின்றி செய்வதில்லை. அதன் உண்மையான அர்த்தம் தெரியாதலால் நாம் அவற்றை மூடநம்பிக்கை என்கிறோம். ஆனால் எல்லா விதமான காரியத்திற்கு பின்னாலும் ஒரு வலுவான காரணம் உண்டு என்பது மறுப்பதற்கில்லை.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
மெனோபாஸ் என்றால் என்ன

மெனோபாஸ் அறிகுறிகள் மற்றும்  பாதுகாப்பு நடவடிக்கைகள்

மெனோபாஸ் அறிகுறிகள் மற்றும்  பாதுகாப்பு நடவடிக்கைகள் மெனோபாஸ் என்றால் என்ன? மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்வில் மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நிற்கும் ஒரு இயற்கையான காலகட்டமாகும். பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் நிகழும், ஆனால்...
chinese garlic chicken

சைனீஸ் கார்லிக் சிக்கன்

சைனீஸ் கார்லிக் சிக்கன் தேவையான பொருட்கள் 1. சிக்கன் – ½  கிலோ ( எலும்பில்லாதது ) 2. மைதா – 3 ஸ்பூன் 3. சோள மாவு – 3 ஸ்பூன் 4. உப்பு - தேவையான அளவு 5....
ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி

ஆப்பிள் பாயாசம் செய்முறை

ஆப்பிள் பாயாசம்  ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது.  ஆப்பிளில் நோய் எதிர்ப்பு...
தினப் பொருத்தம் என்றால் என்ன

தினப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

தினப் பொருத்தம் என்றால் என்ன? தினப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தம் ஆகும். தினப் பொருத்தம் என்பது கணவன், மற்றும் மனைவிக்கு இடையே தினசரி எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை...
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.