சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்புதேவையான பொருட்கள்

  1. ஆட்டுக்கால் – 4 கால்கள்
  2. கத்திரிக்காய் – 4
  3. புளி – ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு
  4. வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்
  5. இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. துருவிய தேங்காய் – 5 ஸ்பூன்
  7. பூண்டு – 5 பல் ( பொடியாக நறுக்கியது )
  8. சின்ன வெங்காயம் – 10
  9. சீரகத் தூள் – 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  12. தக்காளி – 2
  13. மல்லித் தூள் – 1½ ஸ்பூன்
  14. வெல்லம் – 1 துண்டு
  15. கருவேப்பிலை – சிறிதளவு
  16. வடகம் – 1 ஸ்பூன்
  17. எண்ணெய் – தேவையான அளவு
  18. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் கொண்டைக்கடலையையும் குக்கரில் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. தக்காளியையும், தேங்காயையும் தனித்தனியாக  மிக்சியில் சேர்த்து கொள்ளவும்.
  4. ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் வடகம், பொடியாக நறுக்கிய பூண்டு பல், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதினை சேர்க்கவும்.
  7. தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  8. பின் 1 ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  9. வேக வைத்த கொண்டக்கடலை மற்றும் ஆட்டுக்காலையும் சேர்த்துக் கொள்ளவும்.
  10. கடலை வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் அதையும் சேர்த்துக் கொள்ளவும்.
  11. ஆட்டுக் கால் சேர்த்த பின் 2 நிமிடத்திற்கு நன்கு வதக்கி விடவும்.
  12. மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சீரக தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  13. கத்தரிக்கையை நான்கு பாதியாக கீரி சேர்த்துக் கொள்ளவும்.
  14. கத்தரிக்காய் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
  15. புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்துக் கொள்ளவும்.
  16. தேங்காய் விழுது சேர்த்து 2 கொதி வந்ததும் 1 துண்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான  சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

chinese garlic chicken

சைனீஸ் கார்லிக் சிக்கன்

சைனீஸ் கார்லிக் சிக்கன் தேவையான பொருட்கள் 1. சிக்கன் – ½  கிலோ ( எலும்பில்லாதது ) 2. மைதா – 3 ஸ்பூன் 3. சோள மாவு – 3 ஸ்பூன் 4. உப்பு - தேவையான அளவு 5....
கனவுகள் உண்மையா

கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே...
தனுசு ராசி குணநலன்கள்

தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள் தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி...
மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...
யோகம் மற்றும் தோஷம்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும். ஜாதகத்தில்...
அடர்த்தியான தலை முடி

தலை முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில குறிப்புகள்

தலை முடி பாதுகாப்பு நாம் உண்ணும் உணவில் அடிக்கடி பச்சை காய்கறிகள், கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்....
பூக்கள் கனவு பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.