தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்

தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம். அதிரசம் செய்வதற்கு முக்கியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது பாகுபதம் சரியாக இருக்கிறதா என்பது தான். அது தேர்ந்து விட்டால் அதிரசம் செய்வது மிகவும் சுலபம்.                          சுலபமாக வீட்டிலேயே அதிரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

அதிரசம் செய்முறை

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 2
நல்லெண்ணெய் – சிறிதளவு

செய்முறை

  1. அதிரசம் செய்ய முதலில் ஒரு கப் பச்சரிசியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த பச்சரிசியை நன்கு கழுவி 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. 3 மணி நேரம் அரிசி நன்கு ஊறிய பிறகு அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் பொட்டு காய வைக்கவும்.
  4. அரிசி முழுவதுமாக காயாமல் சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போதே எடுத்து ஒரு மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  5. பின்னர் வெல்லப்பாகு தயார் செய்ய  3/4 கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்குகாய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
  6. அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் கொஞ்சம்  ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.
  7. பச்சரிசி மாவில் தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகினை சேர்க்கவும்.
  8. வெல்லப்பாகு சூடாக இருக்கும்போதே மாவில் சேர்க்க வேண்டும்.
  9. வெல்லபாகு சேர்த்த பின் நன்கு கட்டிகள் இல்லதவாறு கலந்து கொள்ளவும்.
  10. தொடர்ந்து மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே மூடி வைக்கவும்.
  11. மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும்.
  12. அதிரச மாவை வட்டமாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  13. அதிரசத்தை எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கும் போது, அடுப்பபை மிதமான சூட்டில் வைக்கவும். அப்போதுதான் அவை நன்கு வெந்து இருக்கும்.
  14. அதிரசத்தை எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதன் மேல் ஒரு கரண்டியை வைத்து அழுத்தி எண்ணெய்யை வடித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
எந்த ராசிக்கு எந்த ஓரைகள்

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்?

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்? மேஷம் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஓரைகள் மேஷ ராசிக்காரர்களுக்கு  நன்மையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...
கனவுகளின் அர்த்தங்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எல்லோருக்கும் கனவுகள் வருகின்றன. சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கலாம். அவற்றுக்கு...
ஆப்பிள் மருத்துவ பயன்கள்

ஆப்பிள் பழத்தின் மருத்துவ குணங்கள் | ஆப்பிள் பயன்கள் மற்றும் நன்மைகள்

ஆப்பிள் ஆப்பிள் அல்லது குமுளிப்பழம் குளிர்ப் பிரேதேசத்தில் வளரக்கூடிய பழமாகும். இது வருடத்திற்கு ஒரு முறை இலையுதிரும் ரோசாசிடே என்ற குடும்பத் தாவரமாகும். ஆப்பிள் பழத்தினுடைய தோல் பகுதியானது மெல்லியதாயும், பழச்சதை உறுதியானதாகவும் இருக்கும்....
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விசாகம் நட்சத்திரத்தின் இராசி : துலாம், விருச்சிகம் விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு விசாகம் நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன் விசாகம்...
மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.