உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம்

watermelon payasamதேவையான பொருட்கள்

  • தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது )
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி, திராட்சை – தேவையான அளவு
  • சர்க்கரை – 100 கிராம்
  • பால் – 1 லிட்டர்
  • ஜவ்வரிசி – 50 கிராம் ( ஊற வைத்தது )
  • ஏலக்காய் தூள் – தேவையான அளவு

செய்முறை

  • தர்பூசணி பாயாசம் செய்வதற்கு தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • 50 கிராம் ஜவ்வரிசியை நன்கு கழுவி ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய் சூடானதும் அதில் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே நெய்யில் நறுக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு வாணலியில் 1 லிட்டர் பாலை சேர்த்து மிதமான தீயில் வைத்து  காய்ச்சவும்.
  • பால் காய்ந்ததும் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து வேக விடவும்.
  • ஜவ்வரிசி கண்ணாடி பதத்திற்கு வெந்ததும் 100 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
  • சர்க்கரை கரைந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
  • இவை அனைத்தையும் சேர்த்த பின் பால் சிறிதளவு கெட்டியானதும் வதக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து கலந்து விடவும்.
  • கடைசியாக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கி சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறினால் சுவையான குளு குளு தர்பூசணி பாயாசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
எலும்பு முறிவு குணமாக

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...
சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 எப்படி செய்வது ?

சிக்கன் 65 செய்வது எப்படி? சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர்...
நகங்களை பராமரிப்பது எப்படி

கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற    நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும்...
தசமி திதி

தசமி திதி பலன்கள், தசமி திதியில் செய்ய வேண்டியவை

தசமி திதி தசம் என்றால் பத்து என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். இராவணனை தசமுகன் அதாவது பத்து தலை உடையவன் என்று அழைப்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இருந்து வரும்...
fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.