உடலை உறுதியாக்கும் உளுந்தங்களி

உளுந்தங்களி

உளுந்தங்களி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு சத்தான உணவாகும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கொழுப்பு, வைட்டமின் B போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளை வலுவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரித்து கர்ப்பபையை  வலுவடைய செய்கிறது.

உளுந்தங்களி தேவையான பொருட்கள்

  1. கருப்பு உளுந்து – 1 கப்
  2. பச்சரிசி – 1 கப்
  3. கருப்பட்டி – 2 கப்
  4. நல்லெண்ணெய் – ¼  கப்
  5. சுக்கு பொடி – ¼ ஸ்பூன்
  6. ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
  7. உப்பு – 1 சிட்டிகை
  8. தண்ணீர் – 3 கப்

செய்முறை

  1. கருப்பு உளுந்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கழுவி காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. உளுந்து காய்ந்தவுடன் அதனை ஒரு அடிகனமாக பத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அதே பாத்திரத்தில் பச்சரசியையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. உளுந்து மற்றும் பச்சரிசி சூடு ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. அடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்துள்ள மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
  6. பின்னர் இதில் 1 கப் மாவிற்கு 3 கப் வீதம் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகள் எதுவும் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
  7. மாவு நன்கு வெந்து வந்ததும், அதில் 1 சிட்டிகை உப்பு, கொஞ்சம் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  8. பின்னர் இதில் 2 கப் கருப்பட்டியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  9. கருப்பட்டி நன்கு கரைந்து அல்வா பதத்திற்கு வந்ததும் அதில் ¼ கப் நல்லெண்ணையை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சத்தான உளுந்தங்களி ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
உடைந்த மண் பாண்டங்கள்

வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்? வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல...
brain games in tamil

Puthirgal with Answers | Vidukathaigal | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
ஆரோக்கியமான நகங்கள்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உங்கள் நகத்தை வைத்தே சொல்லிவிடலாம்.

ஆரோக்கியமான நகங்கள் நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின் ' என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது...
காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...
banana halwa recipe

வாயில் வைத்த உடன் கரையும் வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா தேவையான பொருள்கள் வாழைப்பழம் – 3 பால் – 1 கப் சர்க்கரை – ½ கப் நெய் – ¼ கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு...
நாக தோஷ பரிகார தலங்கள்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.