நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

“நவராத்திரி” என்றால் “ஒன்பது இரவுகள்” என்று பொருள். நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும்.

மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்து உலகிற்கு நன்மை செய்யும் விதமாக துர்காதேவி செய்த போரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இந்த நவராத்திரி விழாவாகும்.

புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசையைத் தொடர்ந்து வரும் இந்த ஒன்பது நாட்களும் பெண் தெய்வங்களை போற்றி வழிபட்டு அவர்களை போல் பெண்களாகிய நாமும் தைரியத்துடனும், வீரத்துடனும் செயல்பட்டு நாம் தினசரி வாழ்வில் சந்திக்க கூடிய மகிஷாசுரன் போன்ற அசுரர்களை கண்டு பயப்படாமல் அவர்களை எதிர்த்து வென்று ஜெய்க்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.

நவராத்திரி முதல் நாள் இந்த வருடம் நவராத்திரி செப் 22-ந்தேதியான இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அக்.2-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக நவராத்திரி என்பது சரஸ்வதி பூஜை வரையிலான ஒன்பது நாட்களும், விஜயதசமி பத்தாவது நாளிலும் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் மிக அபூர்வமாக நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்படும். அப்படி இந்த ஆண்டும் அபூர்வமாக நவராத்திரி விழா மொத்தம் 11 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.

புரட்டாசியின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து, ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவடையும் இந்த நவராத்திரியை தான், வீட்டில் கொலு வைத்து விசேஷமாகக் கொண்டாடுகிறோம்.

நவரத்திரி அம்பிகை வழிபாடு நவராத்திரி பூஜை

நவராத்த்திரி பூஜை செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 06.15 மணி முதல் 7.15 மணி வரையிலான நேரத்திற்குள் நைவேத்தியம் படைத்து, நவராத்திரி பூஜையை துவங்கி விட வேண்டும். அதேபோல் மாலை 4.45 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து பூஜை செய்ய வேண்டும்.

வழிபட வேண்டிய அம்பாள் : ஷைலபுத்ரி . ஷைலபுத்ரி துர்க்கை அம்மனின் முதல் வடிவம். மலை அரசனான இமவான் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.

கோலம்: அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் இட வேண்டும்,

மலர்கள்: மல்லிகை

நெய் வேத்தியம்: வெண்பொங்கல் அல்லது சுண்டல் படைத்து வழிபட வேண்டும்.

பாட வேண்டிய ராகம் : தோடி

பூஜை நேரம்: காலை, 6.15 – 7.15 மணி வரை; மாலை 4:45 – 5:45 மணி வரை.

முதல் நாளில் அம்பாளுக்கு ஆரஞ்சு நிற வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பழங்கள்

கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கருவுற்றிருக்கும் பெண்களின் உணவு முறைகள்  ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கருவுறுதலை வேகமாக்கும். ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகள் பெண்களின் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருவுருதலுக்கு ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இளந்தம்பதியர்...
elumbu theimnaththai sari seyyum unavugal

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

எலும்பு தேய்மானம் எலும்புகள் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எலும்புகள் நல்ல வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனிதர்களுக்கு வயது மூப்பு ஏற்படும்போது...
ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

முதலுதவி பெட்டி யும் அதில் இருக்க வேண்டிய முதலுதவி பொருட்களும்

முதலுதவி பெட்டி முதலுதவி செய்ய மிகவும் முக்கியம் முக்கிய பொருட்கள் நிறைந்த முதல் உதவிப் பெட்டி ஆகும். காயமடைந்தவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்தியாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். இது...
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும்...
அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
prawn recipe

இறால் ப்ரைட் ரைஸ்

இறால் ப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ வடித்த சாதம்  - 2 கப் ( பாஸ்மதி அரிசி ) வெங்காயம் – சிறிதளவு  ( மெல்லிதாக நறுக்கியது ) ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.