வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான சத்தான உணவோடு உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும்

வரகு நெல்லிக்காய் சாதம் 

தேவையான பொருட்கள்

 • வரகரிசி – 1 கப்
 • பெரிய நெல்லிக்காய் – 5
 • வர மிளகாய் – 1
 • பச்சை மிளகாய் – 2
 • கடுகு – ¼ ஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு – ½ ஸ்பூன்
 • பெருங்காயம் – சிறிதளவு
 • மஞ்சள் தூள் – சிறிதளவு
 • நல்லெண்ணெய் – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • செய்முறை
 • முதலில் வரகரிசியை நன்கு சுத்தம் செய்து களைந்து ½ மணி நேரத்திற்கு ஊறவைத்து வைத்துக் கொள்ளவும்.
 • பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர்விட்டு நன்கு கொதிவந்ததும் வரகரிசியினை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வேகவிட வேண்டும்.
 • வரகரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து நீரினை நன்கு வடித்து விடவும். இப்பொழுது வரகு சாதம் தயார். இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் சேர்த்து நன்றாக ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
 • பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.
 • பின்னர் அதனுடன் துருவி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
 • சிறிது நேரம் வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நெல்லிக்காய் கலவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வரகு நெல்லிக்காய் சாதம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மீன ராசி பொது பலன்கள் – மீன ராசி குணங்கள்

மீன ராசியின் குணங்கள் மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கியுள்ளன. இது கால...
தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ மட்டன் கறி – ½ கிலோ பெரிய வெங்காயம் – 3 ( பெரியது...
பருப்பு கீரை பயன்கள்

பலவித மருத்துவ பயன்கள் கொண்ட பருப்பு கீரை

பருப்பு கீரை இந்த கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்ற பெயர் ஏற்பட்டது. பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ என்றும் அழைக்கபடுகிறது. பருப்பு...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....
கனவு பலன் திருமணம்

பொதுவான கனவு பலன்கள்

பொதுவான கனவு பலன்கள் நாம் தூக்கத்தில் காணும் எல்லா கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் நமக்கு வரும் கனவுகள் நம் நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். அதாவது மனிதர்களின் ஆழ்...
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.