கோடை வெயிலில் இருந்து உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

சரும பராமரிப்பு

கோடை காலத்தில் அதிக அளவில் பாதிக்கப்படுவது நமது சருமம் மற்றும் தலைமுடி தான். கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் உடலில் நீர்ச்சத்து குறைந்தது உடல் சோர்வடைந்து பொலிவிழந்து காணப்படும்.

வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெயிலின் தாக்கத்தில் இருந்து  உங்கள் சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். சன்ஸ்கிரீன் லோஷன்கள், கற்றாழை ஜெல்கள் உள்ளிட்ட செயற்கை தயாரிப்புகள் தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். உங்கள் அன்றாட சாப்பாடு மற்றும் பானங்களில் கவனம் செலுத்துவது சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாகும்.

சரும பாதுகாப்பு உடல் மற்றும் சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்..

  1. குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.
  2. கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.
  3. குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு சூடாக்கி அந்த நீரல் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் குறையும்.
  4. வெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.
  5. வாகனத்தில் போகும் போது தலையில் ஸ்கார்ப் அல்லது தொப்பியாவது அணியுங்கள். அடி முடியில் வெயில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
  6. இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள்.
  7. ஒரு ஸ்பூன் தேனும், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
  8. கோடையில் சருமம் எளிதில் வறண்டு போகாமல் இருக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவும் புத்துணர்ச்சியும் பெரும்.
  9. தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.
  10. தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
  11. வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும்.
  12. கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் தண்ணீரை அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும்.
  13. கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.
  14. கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும். வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும்.
  15. வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.
  16. கோடைக்காலத்தில் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.
  17. கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் உண்டாகும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.
  18. உணவில் தினந்தோறும் பச்சைக் காய்கறிகள், கீரைகள் , பழங்கள், தண்ணீர் இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
தோப்புக்கரணம் பயன்கள்

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள்  தோப்புகரணம் போடுவது இன்று உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது. ஆனால் அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால்...
செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
கம்பு அல்வா செய்முறை

புரதச்சத்து நிறைந்த கம்பு அல்வா

கம்பு அல்வா கம்பு ஒரு புரதச் சத்து நிறைந்த உணவாகும்.தினமும் இட்லி, தோசை சாப்பிடுவதை தவிர்த்து கம்மங்கூழ்,கம்பு அடை, கம்பு தோசை என கம்பை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
மந்திரம் என்றால் என்ன

எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்?

எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்? கோயிலில் சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது கோயில் குருக்கள் மந்திரங்கள் கூறி தீபாராதனை காட்டுவதை நாம் அனவைரும் பார்த்திருப்போம். இறைவனிடம் வந்து வேண்டுபவர்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும்,...

Tamil Riddles and Brain Teasers | Tamil Vidukathai with answers | Brain games Tamil

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.